வத்தக் குழம்பு சுவையாக இருக்க....
பருப்பு குழம்பு இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.
வெண்பொங்கலுக்கு நாலு பங்கு பச்சரிசிக்கு, ஒரு பங்கு பாசி பருப்பு என்ற அளவில் தண்ணீர் பங்கும் எடுத்துக் கொண்டால் பொங்கல் பதமாக இருக்கும். வெண்பொங்கலில் மிளகை ஒன்று இரண்டாக உடைத்துப் போட்டால் பொங்கலுடன் இணைந்து தனியாக எடுத்து வைக்க வேண்டி இருக்காது.
சுவை அபாரமாக இருக்கும்.
ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை எண்ணெயில் வறுத்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய் சட்னியில் சேர்க்க சுவையும் மணமும் கூடும்..
வத்தக் குழம்பு வைக்கும்போது இறுதியில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்...வத்தக் குழம்புசுவையாக இருக்கும்.
0
Leave a Reply